தொடர்புடைய செய்திகள்
- அம்மா உணவகத்தை சரிசெஞ்சாச்சு.. அடுத்தது மழைநீர் சேமிப்பு திட்டம் தான்.. தவெக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?
- கடந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தவெக அரசு அதிரடி உத்தரவு...
- சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு.. தவெக அரசு தீர்த்து வைக்குமா?
- கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!.. தவெக அரசு அதிரடி!.. திமுக அதிர்ச்சி!...
- திமுக அரசு செய்யாததை செய்த தவெக அரசு.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.. நீதிமன்றத்திலும் தகவல்...!
ஒரே மாதத்தில் மின்சார துறையை சீரமைக்கும் தவெக அரசு.. இதை ஏன் 50 ஆண்டுகளில் திராவிட அரசுகள் செய்யவில்லை?
தமிழக வெற்றி கழகத்தின் புதிய ஆட்சியில், மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி சீர்திருத்தங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, முதல்கட்டமாக 15,000 புதிய பணியிடங்களை விரைவாக நிரப்ப அரசு தற்பொழுது இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதுமட்டுமின்றி, அடுத்த 5 ஆண்டுகளில் வாரியத்தில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்ற அறிவிப்பு வேலைதேடும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில், 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் எவ்வித பரிந்துரையுமின்றி, முற்றிலும் வெளிப்படையான முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தவெக அரசின் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், இனி வரும் காலங்களில் மின்வாரியத்தில் லஞ்ச ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் மட்டுமே செயல்படும் என்றும், முறைகேடான டிரான்ஸ்பர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தகுதி மற்றும் விருப்ப அடிப்படையிலான பணியிட மாற்றங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இத்தனை காலம் முறைகேடுகளின் புகலிடமாக விமர்சிக்கப்பட்ட மின்சாரத் துறையை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் தளமாகவும், ஊழலற்ற தூய்மையான துறையாகவும் மாற்றியமைத்து வரும் தவெக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியலில் அவர்கள் முன்வைக்கும் உண்மையான மாற்று அரசியலுக்கு சான்றாக அமைந்துள்ளது.
Edited by Siva
