தொடர்புடைய செய்திகள்
- ஒளிப்பதிவு திருத்த சட்டம்… ரஜினி, அஜித் & விஜய் எல்லாம் எங்கே? இயக்குனர் அமீர் காட்டம்!
- ஈரோ போட்டி மைதானத்திலும் வலிமை வெறியர்கள்!? – அப்டேட் கேட்டு போர்டு!
- எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி.. விமர்சித்த கமல்?
- இடுப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? – லியோனிக்கு அன்புமணி கண்டனம்!
- அண்ணாமலைக்கு செல்கிறதா தமிழக பாஜக தலைவர் பதவி!
மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கு பாலமாக இருப்பேன்! – எல்.முருகன்!
மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய – மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்படுவேன் என கூறியுள்ளார்.
மத்திய அரசு நிர்வாக வசதிக்காக அமைச்சரவை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி மத்திய அமைச்சகத்தில் புதிய துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு 3 துறைகளில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் “அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். 2014ல் பிரதமர் மோடி பதவியேற்றது முதலாக தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. மீனவர்கள் நலன் காப்பதில் மத்திய அரசு எந்த சமரசமும் இன்றி செயல்படும். தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். மத்திய – மாநில அரசுகளிடையே பாலமாக செயல்படுவேன்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
