1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi adhav arjuna clash in tn assembly

அப்பாவை காணோம்!.. வீட்டுக்கு போய் கேளுங்க!.. ஆதவ் அர்ஜுனா - உதயநிதி வாக்குவாதம்!...

adhav arjuna
நேற்று முன்தினம் சட்டசபையில் தமிழக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று வேளாண் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இன்று இரண்டு பட்ஜெட்டுகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘எதிர்க்கட்சியினர் எப்போதும் ‘லாட்டரி.. லாட்டரி’ என கத்துகிறார்கள். லாட்டரி நிறுவனத்திடம் திமுக ஏன் 900 கோடி வாங்கியது? இதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி பதில் சொல்ல முடியுமா?’ என்று கேட்டார்.

அதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ‘900 கொடுத்தது ஆதவின் மாமாதான்.. நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளலாம்’ எனக் கூறினார். அதற்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா ‘ஏன் கொடுத்தார்கள் என்பது அவருக்கும் உங்கள் அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும்.. அவருடைய அப்பாவிடம்தான் கேட்க வேண்டும்.. அப்பாவை இங்கு காணவில்லை.. வீட்டுக்கு போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள்’  என பதிலடி கொடுத்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
UPI மூலம் பணம் அனுப்ப கட்டணமா?!.. பரவும் செய்தி!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!...