செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (10:39 IST)

இடுப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? – லியோனிக்கு அன்புமணி கண்டனம்!

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளதற்கு பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக ஆசிரியரும், பட்டிமன்ற பிரபலமுமான திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது!” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?” என கேள்வி எழுப்பியுள்ள நபர், தகுதியான நபரை பாடநூல் கழக தலைவராக அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.