திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (10:52 IST)

எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி.. விமர்சித்த கமல்?

தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியவில்லை என  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து. 

 
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இணை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆம் மீன்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் கால்நடை மற்றும் பால்வளம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு பாஜக தரப்பில் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது என தனது சமூக வலைத்தள பக்கமான டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் அவர் தனது பதிவில், 
 
நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்க  வேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.