ஒளிப்பதிவு திருத்த சட்டம்… ரஜினி, அஜித் & விஜய் எல்லாம் எங்கே? இயக்குனர் அமீர் காட்டம்!
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக சக நடிகர்கள் எல்லாம் ஏன் வரவில்லை என்று இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்துள்ளார். மேலும் பலரும் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தாலும் சூர்யாவின் கருத்து மட்டும் கடுமையான கண்டனங்களை பாஜக அரசின் ஆதரவாளர்களால் சந்தித்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் அமீர் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஏன் ரஜினி விஜய் அஜித் எல்லாம் பேசவில்லை. சூர்யாவை பாஜகவினர் தாக்குபோது கூட ஏன் ஒருவரும் அவருக்கு ஆதரவாக வரவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்