வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (10:31 IST)

மோடி தமிழ்நாட்ல கால வெச்சாலே ’இத’ டிரெண்ட் ஆக்கிடுராங்கலே பா: டுவிட்டரில் வச்சு செய்த குஷ்பு

மோடி தமிழகத்திற்கு எப்பொழுது வந்தாலும் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் டிரரெண்ட் ஆக்கி விடுகிறார்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார்.


மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் 1200 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நீண்ட இழுபறிகளுக்குப் பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் நடைபெறுகிறது. இதற்கான இன்று முற்பகல் சிறப்புத் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகிறார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

மோடி வருகையையொட்டி டிவிட்டரில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மோடி எப்பொழுது தமிழகத்திற்கு வந்தாலும் டிவிட்டரில் கோ பேக் மோடி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி விடுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு மோடி தமிழக வரும் செய்தி வந்தாலே டிவிட்டரில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி விடுகிறார்கள். மோடிக்கும் பாஜகவிற்கும் தமிழகத்தில் துளியளவும் இடமில்லை. தமிழகத்தில் தாமரை மலரவே மலராதே என கூறியுள்ளார்.