தமிழகம் வரும் பிரதமர் மோடி: உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு

Last Modified ஞாயிறு, 27 ஜனவரி 2019 (08:45 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் 1200 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நீண்ட இழுபறிகளுக்குப் பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மதுரை மண்டேலா நகரில் நடைபெறுகிறது.

இதற்கான சிறப்புத் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகிறார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

மோடி வருகையையொட்டி மதுரையில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 


இதில் மேலும் படிக்கவும் :