மோடிக்கு கருப்புக்கொடி: வைகோவை வரவேற்கும் பாஜக
பிரதமர் மோடி நாளை மதுரையில் நடைபெறவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்கவிழாவில் கலந்து கொள்ள நிலையில் அவருக்கு கருப்புக்கொடி காட்டவிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
பிரதமர் மீது பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய திட்டத்தை தொடங்கி வைக்க வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவதை நடுநிலையாளர்கள் பலர் கண்டித்து வரும் நிலையில் பாஜக இளைஞரணியில் கருப்புக்கொடி காட்ட வரும் வைகோவை வரவேற்பதாக நக்கலுடன் ஒரு போஸ்டரை அடித்து மதுரை நகர் முழுவதும் ஒட்டி வருகின்றனர்.
அந்த போஸ்டரில், 'நாளை கருப்புக் கொடி காட்ட வருகை தரும் வைகோ அவர்களை பாஜக இளைஞரணி சார்பாக வரவேற்கிறோம். உங்ளை வரவேற்று வழியனுப்ப பாஜக இளைஞரணி வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது.” என நக்கலாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை மோடி வரும் நேரத்தில் கருப்பு பலூன்களையும் பறக்க விட மதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது