தொடர்புடைய செய்திகள்
- தனித்து போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி! – முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு
- அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள்: ஒப்பந்தம் கையெழுத்து
- 60 தொகுதிகள் கோரும் பாஜக? ஆலோசனையில் அதிமுக??
- ரிசர்வேஷனை விட கவுரவம் முக்கியம்! – திடீர் ட்ரெண்டிங்கில் #பட்டியல்வெளியேற்றம்வேண்டும்
- இந்த தாடியா ? அந்த தாடியா? பாஜகவை எதிர்க்கிறேன் - கமல்ஹாசன்
இதுமட்டும் நடந்தால் 60 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
தமிழக தேர்தலின் போது இது மட்டும் நடந்தால் கண்டிப்பாக நாங்கள் போட்டியிடும் 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
புதிய தமிழகம் கட்சியை கடந்த சில வருடங்களாக அதிமுக கூட்டணியில் இருந்தது ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சி அதிமுக கூட்டணியில் இல்லை. இதனை அடுத்து சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி 60 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது
சமீபத்தில் 60 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியபோது சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்பட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தினால் நாங்கள் போட்டியிடும் 60 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்
தூத்துக்குடியில் நேற்று அவர் பேசிய இந்த கருத்து தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
அடுத்த கட்டுரையில்
