இந்த தாடியா ? அந்த தாடியா? பாஜகவை எதிர்க்கிறேன் - கமல்ஹாசன்

Sinoj| Last Modified செவ்வாய், 23 மார்ச் 2021 (23:17 IST)

தமிழகத்தில் வரும் ஏப்ரல்
6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பஜக போன்ற கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் இறங்கி வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிரசாரம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:

ஒருபுறம் தாலிக்கு தங்கம் தருகிறார்கள், மற்றோருபுறம் டாஸ்மாக் கடைகளை திறக்கிறார்கள்ல் எனவே திராவிட கட்சிகள் 50 ஆண்டுகள் செய்த தவறை சரிசெய்ய வேண்டுமெனறால் எங்களுக்குக் குறைந்தது 10 ஆண்டுகளானது வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும்,இந்த லேடியா அந்த மோடியா என ஜெயலலிதா கேட்டதைபோல் இந்த தாடியா அந்த தாடியா என நான் கேட்கிறேன், நான் பாஜகவை எதிர்த்துப் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :