வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (10:30 IST)

ரிசர்வேஷனை விட கவுரவம் முக்கியம்! – திடீர் ட்ரெண்டிங்கில் #பட்டியல்வெளியேற்றம்வேண்டும்

ரிசர்வேஷனை விட கவுரவம் முக்கியம்! – திடீர் ட்ரெண்டிங்கில் #பட்டியல்வெளியேற்றம்வேண்டும்
தங்களை இட ஒதுக்கீடு பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து சமுதாயத்தினருக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பல்வேறு உயர்வகுப்பினரும் இடஒதுக்கீடு தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கேட்டு வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது #பட்டியல்வெளியேற்றம்வேண்டும் என்ற ஹேஷ்டேகை சமூக வலைதளங்களில் பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.