செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பெட்ரோல் டீசல் விலை இன்று குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை குறையாமல் அதே விலையில் இருந்தது 
இந்த நிலையில் 24 நாட்களுக்கு பின்னர் இன்று பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசு குறைந்து உள்ளது என்பதும் அதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 16 காசு குறைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 92.95 என்பதும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.86.29 என்பதும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 16 காசுகுஅள் குறைந்திருந்தாலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக சுமார் முப்பது ரூபாய் அதிகமாக இருப்பதாகவும் இந்த வரியை மத்திய மாநில அரசுகள் குறைத்தால் சுமார் 70 ரூபாய்க்குள் பெட்ரோல் டீசல் விலை வந்துவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்