1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kovai selvaraj joined in dmk

திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்!

kovai selvaraj5
திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்!
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக பிரபலமாக இருந்த கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக அதிமுகவி, அதிருப்தியாளராக கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்த நிலையில் அவர்  ஓபிஎஸ் மீதும் ஈபிஎஸ் மீதும் அதிருப்தி அடைந்தார். 
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் முக்கிய முடிவு எடுக்க போவதாகவும் கூறி இருந்த கோவை செல்வராஜ் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 
 
ஜெயலலிதாவை ஓபிஎஸ் இபிஎஸ் நினைத்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும் அவர்கள் காப்பாற்ற தவறியதால் தான் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
முதலமைச்சரான பின் முதல்முறையாக ரயிலில் பயணம் செய்யும் முக ஸ்டாலின்!