1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (10:23 IST)

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Repo
கடந்த சில மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கின குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் சற்று முன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 0.35% ரெப்போ வட்டி விகிதம் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஏற்கனவே வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 5.9% என இருந்த நிலையில் தற்போது 0.35%  உயர்ந்து இருப்பதால் 6.25 சதவீதம் என அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளதன் காரணமாக தவணை கடன் வாங்கிய மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்பது குறிபிடத்தக்கது 
 
வீட்டு லோன்,  தனி நபர் லோன், வாகனங்கள் லோன் ஆகியவைகளின் வட்டி விகிதம் உயரும் என்பது குறிபிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீட்டுக்கு வட்டி விகிதம் உயரும் என்பதால் முதலீட்டாளர்களுக்கு இந்த வட்டி விகித உயர்வு மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva