1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kn nehru and sengottaiyan clash in tn assembly

108 பெருசா?.. திமுக பெருசா?.. சட்டசபையில் கே.என்.நேரு - செங்கோட்டையன் மோதல்!...

sengottaiyan
கடந்த சில நாட்களாகவே சட்டசபையில் தவெக உறுப்பினர்களுக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக நேரலை செய்யப்படுவதால் பொதுமக்களும் அதை தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களிலும் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான் இன்று சட்டசபையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ‘நீங்கள் வாங்கியது 108 இடங்கள்.. எதிரில் இருப்பவர்கள் உங்களை விட அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.. ஆனால் பிரிந்து இருக்கிறார்கள். எங்களிடம் இருந்தவர்கள்தான் உங்களுக்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.. எங்கள் தலைவர் எப்போதும் மக்கள் மனதில் இருப்பவர்’ என பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன் ‘108 பெரியதா? எங்கள் எண்ணிக்கையை பெரியதா? என்று கே.என் நேரு கேட்கிறார்.. சின்ன குழந்தை கூட சொல்லும் 108தான் பெரியது என்று.. 97 எண்ணிக்கையை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தியதை திமுக  மறந்து விடக்கூடாது’ என பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜயை வைத்து படமெடுத்தா அரசு வேலையா?!.. கொந்தளிக்கும் ஆர்.பி.உதயகுமார்...