சிப்காட் திறந்திங்களே கே.என். நேரு அங்கிள், ஆனால் வசதி செஞ்சு கொடுத்தீங்களா? அமைச்சர் கீர்த்தனா அதிரடி கேள்வி..
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் கீர்த்தனா மற்றும் மூத்த தலைவர் கே.என். நேரு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
விவாதத்தின் போது திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சிப்காட் தொழிற்சாலைகள் மற்றும் கலைஞர் காலத்து சாதனைகள் குறித்து பெருமையாக பேசப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, சிப்காட் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அப்பகுதிகளில் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சீரான மின்சாரம் மற்றும் பேருந்து போக்குவரத்து போன்ற போக்குவரத்து வசதிகள் கூட இன்னும் முழுமையாக செய்து தரப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், பல இடங்களில் சிப்காட் பகுதிகள் வெறும் பொட்டல் காடுகளாகவே காட்சியளிப்பதாக அவர் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், முந்தைய ஆட்சிக்காலத்தில் விடுபட்ட அந்த குறைகளை சுட்டி காட்டுவதோடு நில்லாமல், தற்போதைய அரசு அந்த பொட்டல் காடுகளை சீரமைத்து தொழில்துறைக்கு ஏற்ற வகையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
விவாதத்தின் நடுவே முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை "அங்கிள்" என்று விளித்து அவர் பேசிய விதம் அவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அரசியல் ரீதியான கடுமையான விமர்சனங்களாக இருந்தாலும், அவற்றுக்கு இடையில் வெளிப்பட்ட இந்த சுவாரஸ்யமான மற்றும் இலகுவான உரையாடல் சட்டமன்ற நிகழ்வுகளில் ஒரு தனித்துவமான தருணமாக அமைந்ததுடன், தற்போதைய அரசின் நிர்வாகச் சீரமைப்புப் பணிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
Edited by Siva
