1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kisan Scheme fraudent responsibility under state government

கிசான் மோசடிக்கு அதிமுக அரசே பொறுப்பு! – நைஸாக நழுவும் பாஜக!

Tamilnadu
விவசாயிகள் பெயரில் நடைபெற்ற கிசான் நிதி மோசடிக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது.

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கிசான் நிதி வழங்குவதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்துள்ள முறைகேடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் முறைகேடு குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த முறைகேட்டில் அதிமுக மற்றும் பாஜக தொடர்பு இருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிசான் நிதி மோசடி குறித்து பேசியுள்ள தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “விவசாயிகளுக்கான கிசான் நிதி திட்டம் மத்திய அரசுடையது என்றாலும், அதனை செயல்படுத்துவது மாநில அரசுகளே.. எனவே முறைகேடு நடந்ததற்கான பொறுப்பை மாநில அரசே ஏற்க வேண்டும்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
குறைந்த ஆக்ஸிஜன்; கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! – ம.பியில் சோகம்!