திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:21 IST)

குறைந்த ஆக்ஸிஜன்; கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! – ம.பியில் சோகம்!

மத்திய பிரதேசத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் குறைபாடால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவால் அதீத பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. மத்தியபிரதேசத்திற்கான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மகாராஷ்டிராவிலிருந்து இறக்குமதியாகி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சில பிரச்சினைகளால் மகாராஷ்டிராவிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற நான்கு பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோக சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆக்சிஜன் சிலிண்டர்களை தாமதமின்றி வழங்க மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேசியுள்ளதாக கூறியுள்ளார்.