வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (16:15 IST)

சூர்யா ஜோதிகாவின் திருமணநாள்…பிரபலங்கள் வாழ்த்து…

இயக்குநர் வசந்தின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் ஜோதிகா நாயகியாகத் தோன்றினார். இப்படத்தில் நாயகன் சூர்யாவும் அவரும் காதலிப்பதாகப் பேச்சு அடிப்பட்ட நிலையில் இருவரும் அதைப் பற்றிக் கூறவில்லை.

பின்னர் காக்க காக்க, மாயாவி,பேரழகன் உள்ளிட்ட படங்களில் ஒருவரும் ஒன்றாக நடித்தனர்.

சூர்யாவின் மார்க்கெட் கஜினி படத்திற்குப் பிறகு ஏறுமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். பின்னர் சூர்யாவும்   ஜோதியாவும் 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நட்சத்திரத் தம்பதியர்க்கு இன்று திருமணநாள் எனவே சூர்யாவின் ரசிகர்கள், பிரபல நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.