திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (16:51 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியா கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது - அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினி  அரசியல் கருத்தை வெளியிட்டாலும் இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் பொறுமைகாக்க முடியாமல்  பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் வைத்து ரஜினிக்கு சமிக்ஞை கொடுத்து வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க மற்ற கட்சியினர் ரஜினியை குறிவைத்து கருத்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாத் தொடங்கினாலும்  அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் ஸ்மார் வகுப்புகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் கிண்டியில் உள்ள புத்தாக்கத் திட்டத்தின் அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.

அப்போது பேசிய ஜெயக்குனார் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் வரும் 2021 ஆம் ஆண்டில் பெரும்பான்மையான பலத்துடன் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தார்.