1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Universities plan and prepare for final exams

ஆன்லைனா? நேரடி தேர்வா? – இறுதி தேர்வு பல்கலைகழகங்கள் முடிவு!

Tamilnadu
தமிழக பல்கலைகழகங்களில் இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கால தாமதம் செய்யாமல் இறுதி தேர்வுகளை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறுதி ஆண்டு தேர்வுகளை நேரடி தேர்வுகளாக நடத்தலாமா? ஆன்லைன் தேர்வுகளாக நடத்தலாமா? என்பதில் பல்கலைகழகங்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைகழகம், பாரதியார் மற்றும் அழகப்பா பல்கலைகழகங்கள் ஆன்லைன் வழி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளன.

பெரியார் பல்கலைகழகம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் ஆகியவை நேரடி தேர்வு முறைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதுதவிர்த்த மற்ற பல்கலைகழகங்கள், சுயாட்சி கல்லூரிகள் எவ்வாறு இறுதி தேர்வை நடத்த உள்ளன என்பது குறித்து தெரியவில்லை.
அடுத்த கட்டுரையில்
மனிதர்களால் பேரழிவை எதிர்கொள்ளும் வன உயிரினங்கள் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்