வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (15:46 IST)

குறைந்து வரும் கருணாநிதியின் ரத்த அழுத்தம் - கலக்கத்தில் குடும்பத்தினர்

கருணாநிதியின் ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதனால், அவரது குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதி உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை முன் திரண்டுள்ளனர்.
 
இந்நிலையில் கருணாநிதிக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கருணாநிதியின் ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் திமுக குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள்  சோகமடைந்துள்ளனர்.