1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (15:39 IST)

திமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதி உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 
இந்நிலையில், மருத்துவமனையின் 4 வது தளத்தில் ஸ்டாலின் ஒரு அவசர ஆலோசனை நடத்தினார். குடும்ப உறுப்பினர்களும், முக்கிய கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் கருணாநிதி உடல்நலம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
 
மேலும் கட்சி தொண்டர்கள் ஏராளமாக குவியத் தொடங்கிவிட்டதால், அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 
 
மேலும், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராஜரத்தினம் மைதானத்தில் 15000 போலீஸார் முகாமிட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு கூடியுள்ளது.