முதல்வருடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

MK Stalin
Last Updated: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (15:06 IST)
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதி உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். கனிமொழி, மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு ஆகியோர் முதல்வருடான சந்திப்பில் கலந்துக்கொண்டர். 
 
இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது நாளே முதல்வர் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :