1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. karate thiyagarajan says about money

தமிழிசை முன்பே காசு வேணும் என சொன்ன கராத்தே தியாகராஜன்/ பெரும் பரபரப்பு..!

karathey thiyagarajan
தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் தங்கள் கட்சி தொண்டர்கள் காசு இல்லாமலே வேலை செய்வார்கள் என்று கூறிய நிலையில் காசில்லாமல் இந்த காலத்தில் எதுவும் நடக்காது என்று தமிழிசை முன்பே கராத்தே தியாகராஜன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்சென்னை தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழிசை சௌந்தர்ராஜன் இந்த தொகுதியில் நான் நிற்பதாக நினைக்க வேண்டாம், பிரதமர் மோடி நிற்பதாக நினைத்து எனக்கு வெற்றி தர வேண்டும், டீ காபி கூட குடிப்பதற்கு காசு இல்லாமல் உழைக்கிற அர்ப்பணிப்பு உள்ள தொண்டர்கள் நீங்கள் என்று பேசினார்

அப்போது கராத்தே தியாகராஜன் எழுந்து ’டீ காபி குடிக்க கூட காசு இல்லாமல் தேர்தல் வேலையை தொண்டர்கள் பார்ப்பார்கள் என்று தமிழிசை கூறினார்கள். அந்த காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது. காசு இல்லை என்றால் இங்கே எதுவும் நடக்காது.தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலுக்கு தேவையான பணத்தை மேலிடத்திலிருந்து வாங்கி கொடுக்க வேண்டும், அப்போதுதான் தொண்டர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள், அதை அக்கா தமிழிசை செய்வார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறியதும் அங்கிருந்து தொண்டர்கள் கைதட்டினார்கள்.

 இதனால் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பெரும் தர்ம சங்கடமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இதே நிலை தொடர்ந்தால் ஒரே கட்சி ஒரே தலைவர் தான் இருப்பார்: ப சிதம்பரம் எச்சரிக்கை..!