ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (18:31 IST)

பிளாக்மெயில் செய்து பணம் வசூலிப்பதா? அண்ணாமலையை சீண்டிய அதிமுக முன்னாள் எம்பி

kc palanisamy
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
தற்போது  நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தமிழ் நாடு பாஜக தலைவர் வரும் மக்களவை தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார். 
 
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக விலகிய நிலையில், அக்கட்ச் பாமக, அமமுக, ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி அமைத்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறது.
 
இன்று கோவையில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை, ஸ்மாட் சிட்டியில் அதிமுக கொள்ளை அடித்த லிஸ்டை வெளியிடுவோமா ?40 ரூபாய் பினாயில் ரூ.400 ? அதிமுக பைல்ஸ் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
 
இதுதுகுறித்து முன்னாள் அதிமுக எம்பி. கேசி. பழனிசாமி,
 
’’DMKFiles என்று அனைத்து அமைச்சர்களை பற்றியும் வெளியிடுவேன் என்று கூறினார் அண்ணாமலை ஆனால் ஒருசில அமைச்சர்கள் பற்றி மட்டும் தான் வெளியிட்டார் மற்றவர்களை பற்றி வெளியிடவில்லை. 
 
அதே போல்  ADMKFiles ’வெளியிடுவேன் என்று ஒருவருடமாக சொல்லிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
 
ஏன் இதுவரை வெளியிடவில்லை? உங்கள் நோக்கம் ஊழலை ஒழிப்பதா அல்லது பிளாக்மெயில் செய்து பணம் வசூலிப்பதா?’’ என்று கேள்வி எழுப்பியுளார். 
 
கடந்தாண்டு ஏப்ரல் மாதம்,4 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,  முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை  வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.