செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2024 (14:30 IST)

திருமணம் செய்து கொண்டார்களா ‘96’ படத்தின் குட்டி ராம்-ஜானு? வைரல் புகைப்படங்கள்..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 திரைப்படத்தில் குட்டி ராம் மற்றும் குட்டி ஜானு கேரக்டர்களில் நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷான் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் ’96’ திரைப்படத்தில் குட்டி விஜய் சேதுபதியாகவும் நடிகை கௌரி கிஷான் குட்டி த்ரிஷா ஆகவும் நடித்திருந்தனர் என்பதும் இந்த படம் இவர்களுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் மீண்டும் இருவரும் இன்று வெளியாகும் ஹாட்ஸ்பாட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர்.

இந்த புகைப்படங்களை பார்த்து உண்மையாகவே இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதோ என்று நினைத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தங்களுக்கு உண்மையான திருமணம் இல்லை என்றும் ப்ரோமோஷனுக்காக இந்த திருமணம் நடந்ததாகவும் கூறியுள்ளனர்

மேலும் இந்த புகைப்படத்தில் ஆதித்ய பாஸ்கருக்கு கௌரி கிஷான் தாலி கட்டுவது போன்ற ஜாலியான காட்சிகள் இருப்பதை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Edited by Siva