தொடர்புடைய செய்திகள்
- ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
- பள்ளி மாணவிக்கு குழந்தை; 10ம் வகுப்பு மாணவன் காரணம்! – கடலூரில் அதிர்ச்சி!
- கன்னியாகுமரியில் நாளை நடைபயணம் தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!
- கன்னியாகுமரி - காஷ்மீர்: ராகுல் காந்தி பாதயாத்திரை
- கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை !
அரசுப் பள்ளியில் ஆபாச பாடம்? ஆசிரியர் கைது! – குமரியில் அதிர்ச்சி!
கன்னியாக்குமரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆபாச பாடம் நடத்தியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் சிலவற்றை நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
அவர் அடிக்கடி இவ்வாறு பாடம் நடத்தியதாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து முறையிட்டும் சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது போலீஸார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
