வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (17:47 IST)

கன்னியாகுமரி - காஷ்மீர்: ராகுல் காந்தி பாதயாத்திரை

Rahul Gandhi
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையைத் தொடங்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரை தொடங்குவதாகவும் நூத்தி நாற்பத்தி எட்டு நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடைய உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர் 
 
இந்த பாதையில் ஆங்காங்கே இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது