வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (08:57 IST)

கன்னியாகுமரியில் நாளை நடைபயணம் தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Rahul Gandhi
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யிலான நடை பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 
 
கன்னியாகுமரியில் நாளை நடை பயணம் தொடங்க இருப்பதை அடுத்து ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார். இதனை அடுத்து சென்னை விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் வகையிலும் குஜராத் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையிலும் இந்த நடைபயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது 
 
இந்த பயணம் தரும் எழுச்சி காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் மற்றபள்ளி