1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (17:00 IST)

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

rahul stalin
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடை பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் இந்த நடைபயணத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
 
இந்த நடைபெற்ற நடைப்பயண தொடக்க விழாவில் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வழங்கி இந்த பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் 
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனது 150 நாட்கள் பாத யாத்திரையை தொடங்கி வைத்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்