1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (11:08 IST)

பள்ளி மாணவிக்கு குழந்தை; 10ம் வகுப்பு மாணவன் காரணம்! – கடலூரில் அதிர்ச்சி!

பள்ளி மாணவிக்கு குழந்தை; 10ம் வகுப்பு மாணவன் காரணம்! – கடலூரில் அதிர்ச்சி!
கடலூரில் 11ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த நிலையில் அதற்கு காரணம் 10ம் வகுப்பு மாணவன் என தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மாடல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சமீபத்தில் கழிவறையில் இறந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியையிடம் கூற அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், பள்ளி மாணவிகளிடையே விசாரணை நடத்தினர்.


அதில் 11ம் வகுப்பு மாணவி ஒருவருக்குதான் இந்த குழந்தை பிறந்தது என தெரிய வந்துள்ளது. அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று போலீஸார் விசாரித்தபோது, 11ம் வகுப்பு படித்த அந்த சிறுமியும், அவரது உறவினரான 10ம் வகுப்பு படிக்கும் சிறுவனும் அடிக்கடி தனியாக சந்தித்து உறவுக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.
பள்ளி மாணவிக்கு குழந்தை; 10ம் வகுப்பு மாணவன் காரணம்! – கடலூரில் அதிர்ச்சி!

இதனால் கர்ப்பமான மாணவி அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். சம்பவத்தன்று வயிற்று வலி ஏற்படவே கழிவறை சென்ற மாணவிக்கு குழந்தை இறந்தே பிறந்துள்ளது. பயத்தில் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளார் மாணவி.

இந்த சம்பவம் தொடர்பாக 10ம் வகுப்பு சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேசமயம் இருவருமே சிறார்கள் என்பதால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.