தொடர்புடைய செய்திகள்
- காகிதப் பூ, காதிலே பூ: பட்ஜெட்டை மொக்கை ஆக்கிய தினகரன்!
- துரத்திவிட்ட தேசியக் கட்சிகள்; ஒன்றும் ஆகாதது போல் பம்மாத்து பண்ணும் கமல்
- கமலை கூட்டணிக்கு அழைக்கும் அழகிரி: ஃபுல் ஷாக்கில் திமுக
- யாருடனும் கைகுலுக்கப்போவதில்லை – கூட்டணிக் குறித்துக் கமல் !
- தமிழகப் பட்ஜெட் தாக்கல் – எந்தந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி
தமிழக பட்ஜெட்: பட்டியல் போட்டு கேள்வி கேட்கும் கமல்!
தமிழக பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் நேற்று துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் மின்சார பேருந்து இயக்கம், விவசாயிகளுக்கு பயிர் கடன், அத்தி கடவு அவினாசி திட்டம், ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி உள்பட பல்வேறு அறிவிப்புகள் இருந்தது.
இந்த பட்ஜெட் குறித்து மக்கள் நீதிமய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுளளது. அந்த பதிவில் தமிழக பட்ஜெட் 2019-20 நிதிநிலை அறிக்கை குறித்து ஒரு சிறிய ஆய்வுக்குப் பிறகு மக்கள் நீதி மய்ய கருத்து’ எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
அந்த பதிவில், "இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர். விவசாயிகள், இளைஞர்கள் மீனவர்களுக்குச் சிறப்பான வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை. சென்ற வருடம் அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை என்னவென்று அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மீண்டும் அதே திட்டங்கள் தூசி தட்டப்பட்டு அறிவிக்கப்படுவதுபோல் தோற்றமளிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் 2019-2020. நிதிநிலை அறிக்கை குறித்து ஒரு சிற்றாய்வுக்குப் பின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கருத்து. pic.twitter.com/84ucA1Abyi
— Kamal Haasan (@ikamalhaasan) February 9, 2019
அடுத்த கட்டுரையில்
