மதுரை பாஜக வேட்பாளர் மு.க.அழகிரியா? பரபரப்பு தகவல்

Last Modified ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (08:03 IST)
கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுகவில் மீண்டும் இணைய மு.க.அழகிரி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், விரைவில் அவர் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
மதுரை பாஜக வேட்பாளராக மு.க.அழகிரியை நிறுத்தி அவர் வெற்றி பெற்றால் அவரை மத்திய அமைச்சராக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினியின் நெருங்கிய நண்பரான மு.க.அழகிரி, அவருடைய ஆலோசனையின்பேரில் பாஜகவில் இணைய விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும், இணைந்தால் திமுக இல்லையேல் ரஜினி கட்சி என்ற முடிவில் இருப்பதாகவும் அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
modi
அதிமுக-பாஜக கூட்டணி அமைய தம்பிதுரை முட்டுக்கட்டையாக இருப்பதால் ஒருவேளை இந்த கூட்டணி அமையாவிட்டால் அழகிரி, ரஜினி, தினகரன், பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை பாஜக உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :