1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:33 IST)

காகிதப் பூ, காதிலே பூ: பட்ஜெட்டை மொக்கை ஆக்கிய தினகரன்!

கடந்த பிப்ரவரி முதல் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விமர்சித்து அமமுக கட்சி தலைவர் தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ள சில பின்வருமாறு.. 
 
மாநில உரிமைகளை பறித்து மத்திய அரசு எந்தளவுக்கு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்பதை அவர்கள் தயவில் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழக அரசே கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலமாக பட்ஜெட் அமைந்துள்ளது.
 
இப்படி சட்டப்பேரவையில், அதுவும் அரசின் பட்ஜெட்டிலேயே அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின் படி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தமிழகத்தையும், தமிழக மக்களையும் பற்றி கவலைப்படாமல், மத்திய அரசின் அடிவருடியாக இருந்து கொண்டு  தனிப்பட்ட சுயலாபங்களுக்காக மாநிலத்தின் நலன்களை மொத்தமாக அடகு வைத்துவிட்டார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
ஆனால் வார்த்தைக்கு வார்த்தை 'இது ஜெயலலிதாவின் ஆட்சி' என்று சொல்லி மக்களை ஏமாற்ற முனைந்திருக்கிறார்கள். டெல்லிக்கு காவடி தூக்கிக்கொண்டிருக்கும் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை மன்னிக்க தமிழக மக்கள் தயாராக இல்லை. 
 
மத்திய அரசோடு இணக்கமாக இருந்து திட்டங்களையும், நிதியையும் பெற்று வருகிறோம் என்று தமிழக அரசும், அமைச்சர்கள் சிலரும் கூறிவருவது எவ்வளவு பெரிய மோசடி என்பதை அவர்களே இந்த பட்ஜெட்டின் மூலம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்கள்.
 
மொத்தத்தில் மத்திய அரசின் பட்ஜெட் 'காகிதப் பூ' என்றால் தமிழக அரசின் பட்ஜெட் 'காதிலே பூ' என குறிப்பிட்டுள்ளார்.