ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (18:22 IST)

கமலை கூட்டணிக்கு அழைக்கும் அழகிரி: ஃபுல் ஷாக்கில் திமுக

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசரை மாற்றி புதுத்தலைவராக கே.எஸ். அழகிரியை நியமித்துள்ளார். மேலும், 4 செயல் தலைவர்களையும் நியமித்துள்ளார். 
 
இந்நிலையில், இன்று காலை சென்னை திநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று, காமராஜரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய கே.எஸ். அழகிரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது அவர், நாட்டின் இறையாண்மை மற்றும் மதச்சார்பின்மையை காப்பாற்றுவதுதான் திமுக கூட்டணியின் குறிகோள். இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலும் இணைய வேண்டும் என கூறியுள்ளார். 
 
ஏற்கனவே, கமல் திமுக அல்லது அதிமுகவோடு கூட்டணி வைக்கமாட்டேன் என தெரிவித்திருந்தார். முதலில் காங்கிரஸோடு கூட்டணிக்கு தயராக இருந்த கமல் திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததும் மெதுவாக ஒதுங்கிவிட்டார். 
 
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புது தலைவர் கே.எஸ். அழகிரி கமலை கூட்டணிக்கு அழைத்திருப்பது திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.