1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kamal party suresh babu joined in bjp

பாஜகவில் இணைந்த கமல் கட்சியின் மாவட்ட செயலாளர்.. இன்னும் பலரை இழுக்க வாய்ப்பு..!

பாஜக
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் திடீரென அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்த சுரேஷ்பாபு என்பவர் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. 
 
வளர்ச்சி அரசியலை  நேசித்து பாஜகவில் இணைந்ததாக சுரேஷ் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி மேலும் சிலர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பாஜக கூட்டணி முறிவு; எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு? – மர்ம நபர்கள் செயலால் பரபரப்பு!