திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (19:09 IST)

அண்ணாமலை எதற்கு நடிகர் கமலுக்கு அட்வைஸ் செய்கிறார்? எஸ்.வி.சேகர்

s ve sekar
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''தமிழ் நாட்டில் வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழ் கற்றுக் கொள்ள தினந்தியின் சேவை முக்கிய காரணம். அவரது கல்வி, அரசியல், தமிழ் சேவை அனைத்து உன்னத சேவை, அவர்கள் வம்சத்தினராலும் தொடர்ந்து நடத்தப்படுகிறது'' என்றார்.

அதிமுக, பாஜக கூட்டணிவு முறிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ''மோடி அவர்கள் 3 வது முறையாக பிரதமராக வரப்போவது உறுதி. கூட்டணி முறிவு பற்றி ஒரே காரணம் அதிமுக தலைவர்களை அரசியல் முதிர்ச்சியில்லாமல் அண்ணாமலை பேசியது எனக் கூறப்படுகிறது.  விரைவில் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார். அண்ணாமலையால் தான் இந்தக் கூட்டணி முறிந்தது '' என்றார்.

மேலும்,  ''இவர் எதற்கு  நடிகர் கமல்ஹாசனுக்கு அட்வைஸ் செய்கிறார். அவர் ஐபிஎஸ் படிக்காமல் இருந்தால், அவருக்குப் பதில் வேறு ஒருவருக்கு அந்த படிப்பு கிடைத்திருக்கும்'' என்று கூறியுள்ளார்.

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கும்வரை தேர்தலில் பாஜக பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். மாநிலத்தில் மக்களுக்கு செய்யக்கூடிய நல்லது ஓட்டு வங்கியாக மாறும். அது மக்களிடம் எடுத்துப் போனால் ஓட்டுகளாக மாறும் ''என்றார்.

லியோ ஆடியோ விவகாரம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''எல்லாவற்றிற்கு கருத்துக் கூற முடியாது. ஆனால், நடிகர் விஜய்  நடிகர் சங்கம் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைத்து  அரசியலுக்கு வருவது குறித்த அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார்'' என்று கூறினார்.