வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (11:36 IST)

பாஜக கூட்டணி முறிவு; எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு? – மர்ம நபர்கள் செயலால் பரபரப்பு!

MGR Statue
சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 2019ம் ஆண்டு முதலாக பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது அதிமுக. அதை தொடர்ந்து அதிமுகவினர் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில் திருப்போரூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்துள்ள இந்த சமயத்தில் இந்த செயலை பாஜகவினர் செய்திருக்க கூடும் என அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K