தொடர்புடைய செய்திகள்
- அண்ணாமலை எதற்கு நடிகர் கமலுக்கு அட்வைஸ் செய்கிறார்? எஸ்.வி.சேகர்
- ''பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார்"- பிரபல நடிகர்
- திமுக ஆட்சிக்கு வந்தாலே, கோவைக்கு தீமைதான்- அண்ணாமலை
- மருத்துவமனையில் திருமாவளவன்.. உடல்நலம் விசாரித்த எடப்பாடி.. புதிய கூட்டணியா?
- பாஜக கூட்டணியில் தினகரன் கட்சியா? அவரே அளித்த பதில் இதோ..!
சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: கேபி முனுசாமி
பாராளுமன்ற தேர்தலில் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம் என்று கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்றும் நாடாளுமன்ற மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலில் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
2 கோடி தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து பாஜகவுடன் ஆன கூட்டணி முறிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran
