வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (19:05 IST)

''பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார்"- பிரபல நடிகர்

s ve sekar
விரைவில் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ் நாட்டில் வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழ் கற்றுக் கொள்ள தினந்தியின் சேவை முக்கிய காரணம். அவரது கல்வி, அரசியல், தமிழ் சேவை அனைத்து உன்னத சேவை, அவர்கள் வம்சத்தினராலும் தொடர்ந்து நடத்தப்படுகிறது என்றார்.

அதிமுக, பாஜக கூட்டணிவு முறிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ''மோடி அவர்கள் 3 வது முறையாக பிரதமராக வரப்போவது உறுதி.  அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி முறிவு பற்றி ஒரே காரணம் அதிமுக தலைவர்களை அரசியல் முதிர்ச்சியில்லாமல் அண்ணாமலை பேசியது எனக் கூறப்படுகிறாது.  விரைவில் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார். அண்ணாமலையால் தான் இந்தக் கூட்டணி முறிந்தது ''என்று  தெரிவித்துள்ளார்.