1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. July month faced 101% excess rain in TN

ஜூலையில் மட்டுமே 101% கூடுதல் மழை… வானிலை அப்டேட்!

தமிழகம்
கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பைவிட 97% கூடுதல் மழை பதிவாகியுள்ளது.


தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்று பார்த்து வருகிறோம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்ந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த ஜூலை மாதத்தில் இயல்பான அளவை விட 101% கூடுதல் மழை பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பைவிட 97% கூடுதல் மழை பதிவாகியுள்ளது.

ஆம், தமிழ்நாட்டில் கடந்த மாதம் அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் இயல்பைவிட 408% கூடுதலாக மழை பொழிந்துள்ளதாம். இதேபோல தமிழ்நாட்டில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மிக குறைந்தபட்சமாக சென்னையில் கடந்த மாதம் இயல்பை விட 22% குறைவாக மழை பதிவானது என கணக்கிடப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு!!