1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have heavy rain today in 16 districts

இன்று எங்கெங்கு மழை… 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகம்
இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 11 மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்.


தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று கோவை, நீலகிரியில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 11 மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நீர்வீழ்ச்சியில் செஃஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் !