வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (14:08 IST)

நிரம்பி வரும் அணைகள்! 10 அணைகள் 100% நிரம்பியது! – விவசாயிகள் மகிழ்ச்சி!

Hogenakkal
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் பல நீர்பிடிப்பகுதிகளில் பெய்துள்ள கனமழையால் தமிழக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழகத்தின் முக்கியமான அணைகளான மேட்டூர், தேர்வாய், கண்டிகை, வீராணம், ஆண்டியப்பனூர், மோர்தனா, குண்டாறு, சோத்துப்பாறை, சோலையாறு, வரட்டுப்பள்ளம், வர்தமாநதி ஆகிய 10 அணைகளும் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளன.

அதுபோல புழல், கெலவரப்பள்ளி, பாம்பாறு, செம்பரம்பாக்கம், மிருகண்டநதி, இராமாநதி, மருதாநதி, வைகை, மஞ்சளாறு, குல்லூர்சந்தை, ஆழியாறு, பாலாரு - பொருந்தலாறு, குதிரையாறு, அமராவதி, பவானிசாகர் ஆகிய அணைகள் அவற்றின் கொள்ளளவில் 80 சதவீதத்திற்கு மேல் நிரம்பி விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் அவையும் முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அணைகள் வேகமாக நிரம்பி வருவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.