1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (08:08 IST)

76வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னை உள்பட இந்தியாவில் கடந்த 75 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று 76 ஆவது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கை இதுவரை பரிசீலனை செய்யப்படாமல் இருப்பது வருத்தத்துக்குரியது என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் இன்னும் சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.