புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (09:18 IST)

இது தமிழ்நாடு. ஒருபோதும் பிஜேபியின் கனவு நினைவாகாது: ஜோதிமணி எம்பி டுவிட்

இது தமிழ்நாடு என்றும் ஒருபோதும் பாஜகவின் கனவு நனவானது என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
 
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது
 
இந்த தீர்ப்புக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வரவேற்பு அளித்து உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நீட் தேர்வு குறித்த தீர்ப்புக்கு தனது கருத்தை தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியதாவது: 
 
திரு. நரேந்திரமோடியின் நல்லாசியோடு தமிழக மாணவர்களின் வாழ்வை அழிப்பதற்கு பிஜேபி துடிக்கிறது. தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்யும் பாஜகவிற்கு நீட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறது.  இது தமிழ்நாடு. ஒருபோதும் பிஜேபியின் கனவு நினைவாகாது என பதிவு செய்துள்ளார்.