திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (18:26 IST)

நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கியது !

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேசிய முகமை உருவாக்கிய இணையதளம் முடங்கியது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி மருத்துவ படிப்பிற்கான  நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பம் இன்று மாலை 5 மணி முதல் பதிவேற்றலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதிலும் இருந்து பல லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றால் நிமிடங்களிலேயே நீத் தேர்வு விண்ணப்பிப்பதற்கான தேசிய தேர்வு முகமை உருவாக்கிய இணையதளம் முடங்கியது.

இது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.