1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நீட் தாக்கம் வழக்கில் மேல்முறையீடு செய்ய போகிறேனா? கரு நாகராஜன் தகவல்

நீட் தாக்கம் குழு வழக்கு குறித்து கரு நாகராஜன் பதிவு செய்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப் போகிறேன் என்று கரு நாகராஜன் கூறியுள்ளார்
 
நீட் தேர்வால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால், அதுகுறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரு நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன் தமிழக அரசின் குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்பதால் வழக்கு தொடர்ந்தேன். இந்த குழுவால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தேர்வு நடைபெறும் என்றும் இந்த வழக்கின் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
எனவே நீட் தேர்வை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என்று திமுகவின் நாடகம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும் கருணாகரன் தெரிவித்தார்