புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (15:58 IST)

கமலுடன் நடிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்… விஜய் சேதுபதி ஆர்வம்!

நடிகர் விஜய் சேதுபதி விக்ரம் படத்தில் கமலோடு நடிக்க இருப்பது குறித்து ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிகராகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும்,  கேமியோ ரோலியும்  நடித்து வருகிறார்.  அதேசமயம் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி சினிமாக்களிலும் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க  உள்ளார். இந்நிகழ்ச்சிக்கா படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அவர் கமல் நடிப்பில் விக்ரம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தேர்ந்த நடிகர்களான கமல் மற்றும் பஹத் பாசில் ஆகியோரோடு நடிக்க இருப்பது குறித்து மிகவும் உற்சாகமாக உள்ளதாகக் கூறியுள்ள அவர் கமலுடன் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் நாளை மிகவும் ஆர்வமாக எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.